திண்டுக்கல் அருகே ஏ. பி நகர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாவட்ட தலைவர் இளையராஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக திண்டுக்கல் மாநகரில் முக்கிய பகுதிகளான மாநகராட்சி மணிக்கூண்டு பகுதியிலும், நாகல் நகர் பகுதியிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போல் உருவ பொம்மை கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும், உள்துறை அமைச்சர் போன்ற உருவத்தை பாடையில் வைத்து இழிவு படுத்திய திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன், வேங்கை ராஜா மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 25க்கும் மேற்பட்ட நபர்கள் மீது தனிமனித உரிமை மீறல் தடுப்பு சட்டத்தின் படியும், பாரத தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அனைவர் மீதும் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரியும், உள்துறை அமைச்சர் அவர்கள் உருவ பொம்மையை எரிப்பதையும், அவரது உருவ பொம்மையை பாடையில் ஏற்றி இழிவுபடுத்தும் போதும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் தெரிவித்திருந்தனர்.