திண்டுக்கல்: அய்யன் திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி

69பார்த்தது
திண்டுக்கல்: அய்யன் திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் தொடர்பாக மாணவர்களால் வரையப்பட்ட புகைப்படங்கள், திருக்குறள் விளக்க உரைகள் கண்காட்சி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார். 

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவர் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் தொடர்பாக மாணவர்களால் வரையப்பட்ட புகைப்படங்கள், திருக்குறள் விளக்க உரைகள் கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி தொடர்ந்து 31.12.2024 வரை நடைபெறவுள்ளது. 

மேலும், இன்று (23.12.2024) முதல் 31.12.2024 ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி வினா போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி