திண்டுக்கல்: மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியை சேர்ந்தவர் வன ராணி இவருக்கு அப்பகுதியில் தமிழக அரசால் வழங்கிய இடம் உள்ளது.

அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த பெரிய கருப்ப தேவர் மகன் தங்கபாண்டி, தங்கதுரை, இந்திராணி ஆகிய மூன்று பேரும் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வனராணி பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வன ராணி தனது குழந்தைகளுடன் தனக்கு அரசு வழங்கிய நிலத்தை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குழந்தைகள் முன்னிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அருகில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டனர்.

குழந்தைகள் முன்பு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி