மார்கழி அமாவாசை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்கு கரையில் அமைந்துள்ள மதுரை வீரன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஓம் முருக சபரி யாத்திரை அன்னதானம் மற்றும் இலவச பேருந்து அறக்கட்டளை சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஐயப்பன் அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட சாத வகைகளும், முருக்கு வடை, இனிப்பு போன்ற பலகாரங்களும் பல வகைகளும் படைக்கப்பட்டன. மேலும் சிறப்பு பூஜையில் பஜனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலி, படி பூஜை, ஐயப்பன் அஷ்டாங்கம் பாடி, மயில் விளக்கு, நாக விளக்கு, நட்சத்திர விளக்கு, பஞ்சாட்சர விளக்கு உள்ளிட்ட தீப தூப ஆராதனைகள் குருசாமியால் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.