திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவ படி, இலவச மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு தொகை, குடும்ப நல நிதி, குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலப் பயன்களை வழங்க வேண்டும் எனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோ மாவட்ட செயலாளர் சுந்தரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.