திண்டுக்கல்: அதிகாரிகளை சரமாரியாக விலாசிய முதியவரால் பரபரப்பு

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரியோடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது சகோதரன் சீனிவாசன் வீட்டை போலி ஆவணங்கள் மூலமாக இடித்த அதே பகுதியைச் சேர்ந்த உதயசேகர் மீதும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த மனுவானது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் எரியோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து கேட்டபோது மனுவை காணவில்லை என பதிலளித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் என்பவர் இன்று 23. 12. 2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மனு கொடுக்கும் இடத்தில் வரிசையில் நின்று கொண்டு அதிகாரிகளை ஒருமையில் பேசியதோடு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாளன்று அதிகாரிகள் நடவடிக்கை குறித்து குற்றம் சாட்டிய முதியவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பான சூழ்நிலை நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி