திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட சுமை ஏற்று தொழிலாளர் சங்கத்தில் இன்று ஏஐடியுசி 105ஆவது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மூத்த நிர்வாகி சந்திரமோகன், ஏஐடியுசி தலைவர் பாலன், சாக்கு சங்கத் தொழிலாளர் சங்கம் சராஜ், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் வேளாங்கண்ணி, கட்டட தொழிலாளர் சங்கம் அலெக்ஸ், ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.