திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைத்தது சரிபார்த்தல், வளர்ச்சி பணி குறித்து மற்றும் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி உள்ளிட்ட மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.