திண்டுக்கல் மாவட்டம் செட்டி நாயக்கன்பட்டி கிராமம் அஞ்சலி ரவுண்டானா அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அனைத்திற்கும் செல்லும் இடமாக அமைந்திருப்பது அஞ்சலி ரவுண்டானா. இப்பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது அருகே பள்ளிகள் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. அஞ்சலி பைபாஸில் அமைந்திருக்கும் கழிவறை பெட்டியை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும்போது இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்சார கம்பம். நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத் துறையில் புகார் அளித்தும் அகற்றாமல் உள்ளனர். பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் கழிவறை பெட்டியையும், விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.