திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் வயது 60. இவர் திமுக பிரமுகர் ஆவார்.
இந்நிலையில் மாயாண்டி ஜோசப் யாகப்பன்பட்டியிலிருந்து வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாயாண்டி ஜோசப் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழ விழ வைத்து. அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் வெட்டினர். இதில்சம்பவ இடத்திலேயே மாயாண்டி ஜோசப் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜராகி வாதாடினார்.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
நீதிபதி முத்து சாரதா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் சேசுராஜ் மற்றும் கென்னடி ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 20, 000 அபராதமும்
டேனியல் ராஜா மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் 50, 000 அபராதமும்
அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், மற்றும் பிரவீன் குமார் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 30, 000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.