திண்டுக்கல்: 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா வார்டு

74பார்த்தது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 15 படுகைகளும் பெண்களுக்கு 15 படுகைகளும் என 30 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்டில் கொரோனா ஸ்வேப் டெஸ்ட், கொரோனா உடை அறை (PPE Kit Room) ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மருத்துவ மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது வரை யாருக்கு கொரோனா தொற்றும் இல்லை என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி