திண்டுக்கல்: நகர், புறநகர் பகுதிகள் 210 சிசிடிவி கேமராக்கள்

74பார்த்தது
திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள மாடர்ன் கண்ட்ரோல் ரூமில் புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் இணைந்து திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் வத்தலகுண்டு பைபாஸ், பழனிபைபாஸ், சீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 210 இரவு மற்றும் பகல் நேரங்களில் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும், மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் துரித நடவடிக்கை எடுப்பதற்காக ஏதுவாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்தார்

இந்த சிசிடிவி கேமராக்கள் திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளை கண்காணிப்பு வளையத்தில் இருப்பது திண்டுக்கல் மக்களுக்கு சிறந்த பயனை அளிக்கும் எனக் கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்

திண்டுக்கல் வர்த்தக சங்கத்தின் சார்பாக ஜி. சுந்தர்ராஜன் அவர்களுக்கு நினைவு கேடயத்தை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி