நெற்றியில் நாமமிட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் மாவட்ட மாநகர தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் நெற்றியில் நாமமிட்டு கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மணிகண்டன் கண்டன உரையாற்றும் பொழுது

கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள குறைந்த அளவு ஜி எஸ் டி வரி கட்டிய பிஹார், ஆந்திர மாநிலங்களுக்கு அதிகப்படியான வரிச் சலுகைகள் மற்றும் அதிக அளவில் நிதிகளை ஒதுக்கி விட்டு இந்தியாவிலேயே அதிகளவு ஜி எஸ் டி வரி செலுத்திய தமிழகத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்காத மத்திய அரசும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழர்களை வஞ்சிக்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பாஜக அரசுக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எதிராக கண்டன கோசங்கள் எழுப்பி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாஜக அரசு மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு அல்வா தான் கொடுத்துள்ளது என்று கூறி காங்கிரசார் பொது மக்களுக்கு அல்வா வழங்கினார்கள்.

இதில் முகமது அலியார் வேங்கை ராஜா, மொழிப்போர் தியாகி ராமு ராமசாமி, காஜாமைதீன், காளிராஜ், கார்த்திக், அப்துல் ரகுமான், ரோஜா பேகம், சுமதி, நாகலட்சுமி, அம்சவல்லி, பாரதி மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி