அஞ்சல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பு சார்பில் அகில அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை கோட்டம் திருப்பரங்குன்றம் அஞ்சலகத்தில் பெண் தபால் ஊழியராக பணிபுரிந்த சுமதிக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய அஞ்சல் அதிகாரி தீபராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க செயலாளர். ராஜசேகர் பொருளாளர் பழனி வேல் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் சென்றாய பெருமாள் செயலாளர் கருப்பையா, பொருளாளர் பழனி வேல் உள்ளிட்ட பெண் ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி