பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்பொழுது தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று 27. 07. 24. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது அதன்படி திண்டுக்கல் திமுக கிழக்கு மேற்கு மாவட்டம் சார்பில் மணிக்கூண்டில் சனிக்கிழமை மதியம் 12: 30 மணியளவில் மத்திய அரசை கண்டித்தும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.