தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றியது போல பள்ளிகளுக்கும் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்
என தமிழ்நாடு பிரைமரி , நர்சரி , மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.
திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள வித்யா பார்த்தி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் தமிழ்நாடு பிரைமரி , நர்சரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி சிபிஎஸ்இ சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவரும், வித்யா பார்த்தி பள்ளி குழுமத்தின் தலைவருமான ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் முன்னிலை விகித்தார். மாவட்ட பொருளாளர் ரவி உட்பட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.