சிபிஐ அல்லது போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று செல்போனில் அழைப்பர். பின்பு FEDEX கொரியர் மூலம் நீங்கள் வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்துவதாகவும் உங்களது ஆதார் கார்டு தான் அதில் உள்ளது என்று மிரட்டுவர். நம்மளை தனிமைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று கூறுவார்கள். ஸ்கைப் மூலம் பேச சொல்வார்கள். அந்த ஸ்கைப் மூலம் நாம் தொடர்பு கொண்டால் காவல்துறை லோகோ முதலில் வரும்.
பிறகு காவல்துறை போன்று போலியான செட்டப் செய்து நம்மளை மிரட்டி நமது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறுவார்கள். போலியான வங்கி கணக்கு எண்ணை கொடுத்து நமது பணத்தை திருடி கொள்வார்கள். இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி தெய்வம் தெரிவிக்கையில்: உங்களுக்கு இவ்வாறு செல்போன் அழைப்பு வந்தால் நீங்கள் பயப்படாமலும், பதராமலும் பொறுமையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.
வந்த செல்போன் அழைப்பை உடனடியாக துண்டித்து விடவும். மேலும் அவர்களை நேரில் வர சொல்லவும் இதனை தொடர்ந்து சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் உங்களுக்கு உதவிட நாங்கள் இருக்கோம் என்று கூறினார்.