கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி அலுவலர்கள் போராட்டம்

68பார்த்தது
கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி அலுவலர்கள் போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியில் மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுலாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஐ. டி. ஐ முடித்தவர்களுக்கு தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். நகர, மாநகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொராணா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கேரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வியாழனன்று நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மேலும் திண்டுக்கல் மாவட்;டத்தில் உள்ள நகராட்சிகளிலும் இந்த போராடடம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி