திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி தலைமையிலான இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் வேங்கைராஜா, கணேசன், காளிராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தின்போது இந்து மதத்தினரின் மனம் புண்படும்படியாக நெற்றியில் நாமம் அடிக்கும் போராட்டம் என்கின்ற பெயரில் பெருமாளை வழிபடுபவர்கள் நெற்றியில் அடையாளமாக இட்டுக் கொள்ளும் திருநாமத்தை நெற்றியில் இட்டும் பேப்பர்களில் திருநாமத்தை வரைந்து மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கோடு கலவரத்தை தூண்ட முயற்சித்தார்கள் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.