கதர்அங்காடியில் தீபாவளி சிறப்புவிற்பனை ஆட்சியர் துவக்கினார்

63பார்த்தது
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமை வகித்து, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ. 67. 00 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் (2024) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ. 125. 00 இலட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குநர் குமரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி