திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் தனபாலன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் கடந்த 2022ம் ஆண்டு நவ. 17-ல் ஏலம் விடப்பட்டது. தமிழ்நாடு வெளிப்படையான ஏல - அறிவிப்பு சட்டத்தின் கீழ் ஏல அறிவிப்புகளை - உள்ளூர் நாளிதழ்களில் - விளம்பரம் செய்ய வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வர்களுக்கு ஏலம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதியை அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால் 34 கடைகள் ஏல ஒதுக்கீட்டை ரத்து செய்து விதிப்படி அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விட உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் - சுப்பிரமணியன், விக்டோரி யாகவுரி ஆகியோர் - விசாரித்து தீர்ப்பு வழங்கினர். அதில் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இறுதித் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் ஏற்கனவே முறைகேடாக நடத்திய 34 கடைகளில் ஏழத்தை ரத்து செய்து சட்ட விதிகளின்படி புதிதாக மறு ஏலம் விட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜகவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தனபாலன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.