கலைஞர் நூற்றாண்டு கலை விழா போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.
கலைஞர் நூற்றாண்டு கலை விழா, ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நீதி காவலர், பகுத்தறிவுச் சீர்திருத்தச் செம்மல், தொலைநோக்குச் சிந்தனையாளர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி-கலைஞர் போன்ற தலைப்புகளில் மாணாக்கர்கள் பங்கேற்கும் போட்டிகளான, கட்டுரைப் போட்டி. பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி. ஓவியப் போட்டி, கருப்பொருள் போட்டிகள் என பல்வேறு போட்டி நிகழ்வுகள் 07. 10. 2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 50 பள்ளிகள் மற்றும் 10 கல்லுாகளில் கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி. ஓவியப் போட்டி. கருப்பொருள் போட்டிகளும் என விளையாட்டு விழா போட்டிகளும் மற்றும் இளைஞர்களுக்கு கபடி, கால்பந்து மற்றும் கைபந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசளிப்பு விழா 03. 02. 2024 அன்றும் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 02. 12. 2023 அன்றும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.