அங்கன்வாடியை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி மேற்கொள்ளும் மோடி அரசுக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக கருப்பு தினம் அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி திட்டததை எந்த நிலையிலும் தனியாருக்கு தாரை வாக்கக்கூடாது. அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக உள்ளுர் மாறுதல் வழங்கிட வேண்டும். 2, 3 மையங்களில் பணியாற்றி கூடுதல் பணிச்சுமையை கைவிட வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் பதிவு என்று ஏதாவது ஒன்றை மட்டும் நிரந்தரமாக்கிட வேண்டும். 10 வருடங்சகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு
பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ. 18 ஆயிரமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கருப்பு தின
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் செல்வ தனபாக்கியம் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். மாநிலத்தலைவர் ரத்தினமாலா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் தவக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் முபாரக்அலி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ்செல்வி நன்றி கூறினார்.