கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு

64பார்த்தது
கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு
திண்டுக்கல் அருகே ஆயில் மில்களின் கழிவு நீர் விவசாய நிலங்களில் கலப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர். வேல்வார் கோட்டை கிராமத்தில் மூணாண்டி பட்டியில் தனியார் ஆயில் மில்லில் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கொடுமை ஒரு ஐந்து வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் வேல்வார் கோட்டை பஞ்சாயத்தில் வசிக்கும் கிராமத்தில் அனைத்து மக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். நெல், சோழ பயிர் எதுவுமே விளைவிக்க முடியவில்லை.

அதனால் மாவட்ட ஆட்சியர் இதற்கு ஒரு தீர்வு தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: நன்றாக விளையக்கூடிய விளைநிலங்கள் தற்போது தரிசுகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய விளைநிலங்கள் இப்போது விற்பனைக்கு செல்லக்கூடிய நிலைக்கு மாறிவிட்டது. தொடர்ந்து ஆயிலால் பாதிக்கப்பட்டு வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் போர் போட்டால் தண்ணீர் வருவதற்கு பதிலாக ஆயில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் குடிக்க முடியவில்லை துர்நாற்றம் வீசுகிறது. பொருட்களை விளைவிக்க முடியவில்லை. நாங்கள் குளிப்பதற்கு கூட சிரமமாக உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் ஆயில் நிறுவனத்திற்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you