“தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

50பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் “தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் அரசு எம். வி. எம். கலைக் கல்லுாரியில் நடைபெற்றது. மாணவர்களின் ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி சேமிக்கு கணக்கு மற்றும் கைபேசி எண், பள்ளிகளில் மாணவர்களுக்கான இஎம்ஐஎஸ்(EMIS) எண் கல்லுாரிகளில் சேர்ந்த பின்னர் மாணவர்களுக்கான யுஎம்ஐஎஸ்(UMIS) எண்ணுடன் ஒருங்கிணைப்பு செய்தல், மின்னஞ்சல் முகவரி, வங்கி சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதியதாக வங்கிக் சேமிப்பு கணக்குகளை விரைவாக தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து செயலாற்றிட வேண்டும்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 1000 தொகை, மாணவர்கள் தங்கள் கல்விக்கான செலவுகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களின் கல்விச் செலவு சுமை குறைகிறது. எனவே, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி