ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை

75பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டியும் மற்றும் வருகின்ற பத்தாம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள வேட்டையின் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டியும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து தங்கரதம் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் செந்தில், சிவா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி