திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் திண்டுக்கல் மெங்கல்ஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த டேவிட்விஜய் வயது 22, தனுஷ்லால் வயது 21 ஆகிய 2 பேர் ரமேஷிடம் தாங்கள் பெரிய ரவுடி என்றும் ரவுடி மாமுல் வேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு டேவிட்விஜய், தனுஷ்லால் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.