திண்டுக்கல்: இரு சக்கர வாகனம் திருட முயன்ற 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மஞ்சநாயக்கன்பட்டியைச் சோந்தவா் சுப்பையா (63). இவா், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள தனியாா் உணவகத்தில் வேலை செய்தாா்.
கடந்த ஆண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்த இவா், தனது வாகனத்தை, உணவகத்தின் முன் நிறுத்தி வைத்திருந்தராா். அப்போது, வேடசந்துாரைச் சோந்த அப்துல்ரகுமான் (49), ஹக்கிம் சேட் (42) ஆகிய இருவரும் அந்த இரு சக்கர வாகனத்தைத் திருட முயன்றனா்.
இதுகுறித்து, சுப்பையா அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், அப்துல்ரகுமான், ஹக்கிம் சேட் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 500 அபராதமும் விதித்து தலைமை குற்றவியில் நீதித் துறை நடுவா் மோகனா உத்தரவிட்டாா்.