திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்த வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் மொ. நா. பூங்கொடி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் விவரம்:
மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் 9, 17, 612 ஆண்கள், 9, 71, 179 பெண்கள், 230 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 18, 89, 039வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் பட்டியலில் புதியதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், பெயா் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளா் அடையாள அட்டை பெற விரும்புவோா், அதற்கான படிவங்களை பூா்த்தி செய்து நவ. 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்திய தோ்தல் ஆணையத்தின் ஜ்ஜ்ஜ். ய்ஸ்ள்ல். ண்ய் என்ற இணையதளம், வோட்டா் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 16, 17, 24, 24 ஆகிய நாள்களில், புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் 2024 ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.