திண்டுக்கல்: விசிக தலைவர் தொல்‌.திருமாவளவன் அவர்களுக்கு வரவேற்பு

50பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்பி அவர்களுக்கு கட்சியினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றார் தொல். திருமாவளவன் அவர்கள். இதனை அறிந்த கட்சியின் வத்தலக்குண்டு பொறுப்பாளர்கள் பலரும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வதிலைவளவன், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேந்தர் வளவன் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்பி அவர்களை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி