திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் மக்களின் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் முருகேசன் அவர்கள் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாநில நிலைக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சுப்பராயன், AITTUC - மாநில துணைத்தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக உங்களுடைய மனுவை வேடசந்தூர் வட்டாட்சியரிடம் அளித்தனர்.