குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவ வேண்டும்

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்களை திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் சந்தித்து தங்கள் கிராமங்களுக்கு தேவைப்படும் வசதிகள் நிழற்குடை, சமுதாயக்கூடம், நாடகமேடை, பகுதிநேர நியாய விலைக்கடைகள், உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு கொடுத்து தீர்வு கண்டனர்.

அப்போது மாற்றுத்திறனாளி இருவர் தங்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர். உடனே அவர்களுக்கு மூன்று சைக்கிள் வாகனம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முத்தமிழ் அறிஞர் தமிழ் இன காவலர், செம்மொழி நாயகன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயர் தாங்கி வந்திருக்கும் திட்டமான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயனடைய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் வீடு அருகே குடிசை போட்டு வாழும் ஏழை மக்கள் மற்றும் ஓட்டு வீட்டில் வசிக்கும் எளிய மக்களின் நலன்கருதி அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் பெற்றுத்தர உதவ வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி