ஸ்ரீபெருமாள்சுவாமி, வீருமல்லம்மாள் கோவில் மகாகும்பாபிசேகம்

81பார்த்தது
அம்பாத்துரை கதிர்பட்டியில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபெருமாள் சுவாமி மற்றும் ஸ்ரீவீருமல்லாமல் திருக்கோவிலுக்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால கோமம் நடைபெற்றது. காலை 9. 30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டர்கள் கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதனை தொடர்ந்து காட்டு தோட்டத்தில் உள்ள ஸ்ரீவீருமல்லமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தாடிக்கொம்பு ஸ்ரீசௌந்தராஜபெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஜெகநாதன் தலைமையில் பட்டர்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலத்தை எடுத்துக்கொண்டு கோவிலை வலம் வந்தனர். 10. 45 மணியளவில் பட்டாச்சாரியர்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் புனித நீர் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் காத்திருந்து தீர்த்தத்தை பெற்றுக்கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொள்ள வந்தபோது கோவில் கமிட்டி தலைவர் ஸ்ரீமல்லுச்சாமி, செயலாளர் ஜாதிகவுன்டன்பட்டி மல்லையன், துணைப்பொருளாளர் ரெங்கசாமிபுரம் ராஜாமணி தலைமையில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கு மாலை மற்றும் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி