காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள்.

352பார்த்தது
காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று மாலையில் காலபைரவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல்லின் முக்கிய கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி