மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் விழாவாக திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கொண்டாடப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை திமுக பேரூர் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சித்தையன் கோட்டை பேரூர் கழக நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் இன அணி அமைப்பாளர் ரபீக் மைதீன், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பிரதிநிதிகள் சவுந்தர பாண்டியன், கோபால்
பேரூர் கழக துணைச் செயலாளர் ஜான், முன்னாள் செயலாளர் பஷீர் அகமது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபீக், கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள் தங்கப்பாண்டியன், தியாகு, மற்றும் சித்ரா சிறுபான்மையினர் அணி முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்ல மறைக்காயர், வார்டு செயலாளர்கள் குமரேசன், மனோகரன் விவசாய அணி அமைப்பாளர் முருகன் மற்றும் சேடப்பட்டி முத்து, மனோகரன், சௌடீஸ்வரன், மயில் வாகனம் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.