திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் பழுதடைந்து பாலடைந்த நிலையில் உள்ள கிணற்றுக்குள் தெரு நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் என்பவர் உடனடியாக ஆத்தூர் தீ அணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில்
ஆத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன் மற்றும் சோலேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு துறை முன்னணி வீரர்கள் ராஜ்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து
கிணற்றிற்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை கயிறு போன்ற உபகரணப் பொருட்கள் உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.