சித்தையன்கோட்டை: SBI வங்கி ATM-யில் கொள்ளை முயற்சி

84பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை கடைவீதியில் SBI வங்கி ATM செயல்பட்டு வருகிறது.

இங்கு நேற்று இரவு நுசள்ழைந்த மர்ம நபர் ATM எந்திரத்திற்குள் இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்கு
முயற்சித்து பலனளிக்காததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர் பிரான்சின் தீபா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சேசுராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி