சேவுகம்பட்டி; கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

51பார்த்தது
சேவுகம்பட்டி பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில் சேவுகம்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் தினந்தோறும் டன் கணக்கில் குப்பைக் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர்.

மேலும் வத்தலக்குண்டுவிலிருந்து உசிலம்பட்டி செல்லும் பிரதான சாலையில் இறைச்சிக் கழிவுகளை சாலையிலேயே கொட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இறந்த நாய் அழுகிய நிலையில் அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வத்தலக்குண்டுவிலிருந்து இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை நாய்கள் துரத்திச் சென்று கடிப்பதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்தக் குப்பைக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சிறுவர் சிறுமிகளும் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி