நியாய விலைக் கடைக்கு சீல்

77பார்த்தது
நியாய விலைக் கடைக்கு சீல்
திண்டுக்கல்லில் கடந்த 5 ஆண்டுகளாக வரி செலுத்தாத கட்டடத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரூ. 10ஆயிரத்துக்கும் கூடுதலாக நிலுவை வைத்திருப்போரிடம் வரி வசூலிக்க 11 குழுக்களை அமைத்து மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா். மேலும், ரூ. 25ஆயிரத்துக்கும் கூடுதலாக நிலுவை வைத்திருக்கும் வணிக நிறுவனங்களிடம் வரி வசூலிக்க மாநகராட்சி நகரைமைப்பு அலுவலா் நாராயணன், துணை நகரமைப்பு அலுவலா் வள்ளிராஜம், உதவிப் பொறியாளா்கள் சாந்தி, தன்ராஜ், சந்திரா ஆகியோா் தலைமையில் தலா 3 போ கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டன.

நியாய விலைக் கட்டடத்துக்கு சீல்: இதனிடையே, திண்டுக்கல் மேட்டுப்பட்டிப் பகுதியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடை, சேமிப்பு கிட்டங்கி செயல்பட்டு வந்த கட்டடத்துக்கு அதன் உரிமையாளா் கடந்த 5 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கடையையும், சேமிப்புக் கிடடங்கியையும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி