அறிவியல் இயக்க 11வது மாவட்ட மாநாடு

66பார்த்தது
அறிவியல் இயக்க 11வது மாவட்ட மாநாடு
திண்டுக்கல்: தமிழ்நாடு அறிவியல் இயக்க 11வது மாவட்ட மாநாடு கச்சேரி தெரு அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் ராசு தலைமையில் நடந்தது.

மாநில பொதுசெயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் வீரையா, அப்துல் ஜாபர் வரவேற்றனர். முன்னாள் மாநில தலைவர் மோகனா, மாவட்ட கிழக்கு தாசில்தார் சுகந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட கவுரவ தலைவர் ரவீந்திரன் பங்கேற்றனர். கனவு ஆசிரியை விருது பெற்று வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்லும் நல்லாம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை ராதிகா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் குருபிரசாத், சுப்பு உலகநாதபாண்டியன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி கவுரவிக்கபட்டனர்.

எழுத்தாளர் மீனாசுந்தர், அரங்கபெருமாள், சிராஜ்நிஷா பேசினர். புதிய மாவட்ட நிர்வாகிகளாக தலைவர் வளர்மதி, செயலாளர் ராசு, பொருளாளர் அப்துல் ஜாபர், இணை செயலாளர் கவுதமன், துணை தலைவர்கள் ரவீந்திரன், பரமேஸ்வரி, சுப்பு, உலகநாத பாண்டியன், குருபிரசாத், முத்துமாணிக்கம், துணை செயலாளர்கள் வீரய்யா, ஷர்மிளா, கனகேஸ்வரி, செந்தில் இளங்கோ தேர்ந்தெடுக்கபட்டனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி