திண்டுக்கல்லில் பிரகாஷ் காரத் பேச்சு

1072பார்த்தது
திண்டுக்கல்லில் பிரகாஷ் காரத் பேச்சு
பாஜகவின் வாக்குச்சாவடியாக மாறிப்போன ராமர் கோவில், அதன் தலைமை பூசாரியான மாறிப்போன பிரதமர் மோடி என்று கிண்டலும் கேலியுமாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு.

நாடாளுமன்ற 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான சிறப்பு பயிற்சி பட்டறை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலும் அரசியல் சிந்தாந்த சவால்களும், கடமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சிபட்டறையில் கலந்து கொண்ட பிரகாஷ்காரத் அரசியல் சித்தாந்த களத்தில் பாஜகவை முறியடிப்போம் என்ற தலைப்பில் பேசியதாவது.

இந்த பயிற்சி பட்டறை நாம் எதிர் நோக்குகிற சவாலை நாம் எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் கூடியிருக்கிறோம். 18வது மக்களவை தேர்தலை சந்திக்கக் கூடிய சூழல் இது. ஏப்ரல் துவக்கத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் பத்தோடு பதினொன்றாக நாம் பார்க்கக் கூடாது. ஒரு சாதாரண காலத்தில் நடைபெறுகிற தேர்தலாக இதை பார்க்கக்கூடாது. அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? எந்த அரசு ஆட்சிக்கு வரும் என்று சாதாரணமாக பேசுவதற்கான விசயமாக இந்த தேர்தலை பார்க்க முடியாது. இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி