பித்தளைப்பட்டி: காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது

4பார்த்தது
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக காரில் கொண்டுவரப்பட்ட 160 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரில் வந்த தங்கதுரை(30) என்பவரை கைது செய்தனர்.

மேலும் பித்தளைப்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, தருமத்துப்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென நடத்திய ஆய்வில் 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி