திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் நாகல்நகர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் நாகல்நகர் சந்தைப்பேட்டை பகுதியில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை கடைகள் நடத்தி வருகிறோம்.
சாலையோரங்களில் கடைகள் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி, அப்பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தை ஏலம் எடுத்து காய்கறி வியாபாரம் செய்கிறோம்.
ஆனால் அந்த கட்டிடத்தில் எங்களை வியாபாரம் செய்ய விடாமல் சிலர் தடுத்து மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.