பட்டிவீரன்பட்டி: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

72பார்த்தது
பட்டிவீரன்பட்டி: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கோட்டைமுனியாண்டி கோவில் அருகே கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மகேந்திரன்(52), ராமராஜ்(32) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 11 ஆயிரம் லாட்டரி சீட்டுகள், ரூ. 28 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேற்படி சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி