திண்டுக்கல்லில் கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சி, குட்கா, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, 14 கடைகளுக்கு ரூ. 59, 000 அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவானி, பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருடன் நாகல்நகர், சந்தைரோடு, கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
கெட்டுப்போன 15 கிலோ இறைச்சி, 10 கடைகளில் விற்பனைக்கு இருந்த 8 கிலோ தடை குட்கா, 3 கடைகளில் 22 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 59, 000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 3 கடைகளில் கலப்பட பொருட்கள் இருந்ததாக மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பிவைத்து, அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.