மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் குமார் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார். இதனை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கார்த்திகேயன், தங்கராஜ், லலித்குமார், சுந்தரம், கிருஷ்ணசாமி பிரசாத், சிவா, பெருமாள், கீதா, விஜயா, மேகலா
சங்கீதா, தன்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இதேபோல் தேனி க. விலக்கு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மதுரை சம்பவத்தை கண்டித்து
போராட்டம் நடத்தினர். டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் அவர்கள் கோஷமிட்டனர்.