மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்

483பார்த்தது
மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. நாளை பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி