திண்டுக்கல்: அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

73பார்த்தது
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், நினைவு நாளை ஒட்டி தமிழக முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினுடைய மாநில தலைவர் தமிழ் பெருமாள், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் வினோத் குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் விஸ்வ பாலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கணேசன் மற்றும் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடக்கி வைப்பதற்கு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி