தமிழ்நாடு மாநில ஜீனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 5 முதல் 7 வரை சென்னையில் நடந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த 3500 தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தில் இணைப்பு பெற்ற நத்தம் என். பி. ஆர். , கல்லூரி தடகள சங்கத்தின் தடகள வீரர்கள் 27 பேர் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல் 18 வயது பிரிவில் ஆர். சி. ஜித்தின் அர்ஜூனன் 7. 37 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பெற்றார். உயரம் தாண்டுதலில் 16 வயது பிரிவில் ஏ. லிங்கேஷ்வரன் 1. 69மீட்டர் உயரம் தாண்டி 2ம் இடம் பெற்றார். பெண்டத்லான் போட்டியில் 16 பிரிவில் பால பிரசன்னா 3130 புள்ளிகள் பெற்று 2 ம் இடம் பெற்றார். இவர்களுக்கு என். பி. ஆர். , கல்லூரி தடகள சங்கத்தின் சார்பாக பரிசு, பாராட்டு சான்றிழ் வழங்கப்பட்டது.