திண்டுக்கல் அருகே உள்ள ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என வார்டு உறுப்பினர்கள் ஊராட்சித் தலைவர் மீது புகார் கூறினர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்து வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் எத்திலோடு ஊராட்சியில் நான்கு வருடங்களாக தலைவர், தலைவரின் மாமனார் மற்றும் துணைத் தலைவர் இணைந்து கோடிக்கணக்கில் முறைகேடு வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் கூட்டுவதில்லை.
இதுவரை ஊராட்சி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அனைத்து வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். தலைவர் துணைத் தலைவர், தலைவரின் மாமனார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எத்திலோடு வார்டு உறுப்பினர்கள் 7 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.